சொல்லாதே… யாரும் கேட்டால்..!

1
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 26, 2024
பார்வையிட்டோர்: 5,959 
 
 

காதை தீட்டிக் கேட்டுக் கொண்டிருந்தான் கைலாஷ். ’உங்க வீட்டுக் காரருக்குத் தெரிய வேண்டாம். அவருக்குத் தெரியாம வா..! உன்னை நான் ஒரு வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன்!’ என்றது அந்தக் குரல்.

‘சே! இந்த உலகத்துல யாரை நம்பறதுன்னே தெரியலையே?! பார்க்கப் பாவமா இருக்கேன்னு குடியிருக்க வைத்தால், புருஷனுக்கே தெரியாம கணேசன் பெண்டாட்டி இப்படி லூட்டி அடிக்கிறாளா?’ மொதல்ல இவங்களைக் காலி பண்ணச் சொல்லீடணும்! இரக்கம் பார்க்கறது இந்தக் காலத்துல ரொம்பத் தப்பு! ஆறு பூராம் பாலாப் போனாலும் நாய் நக்கித் தானே குடிக்கும்?! அதுமாதிரி ஆயிடுச்சே! தகுதி பார்க்காம வீட்டை வாடகைக்கு விட்டது?! நொந்து கொண்டான் ஹவுஸ் ஓனர் கைலாஷ்.

‘இதை கணேசன் கிட்டச் சொல்லீடலாமா?’ ஒரு நிமிஷம் யோசித்துவிட்டு, ‘சே!சே! வேண்டாம்!! அவங்க குடும்பத்துக்குள்ள வீணா பிர்ச்சனையை உண்டாக்குவானேன்?! முடிவுக்கு வந்தான் ஆனாலும், மனசு கேக்கலை. எதுக்கும் அரசல் புரசலாக் கேள்விப்பட்டேன்னு சொல்லி வைப்போம்! என்றது உள் மனம்.

அன்றைக்கு கணேசனைப் பார்த்தும் பார்க்காதது போலிருந்தான் கைலாஷ். கணேசனே ஆரம்பித்தான்…

‘சார், இப்பல்லாம் நீங்க என்மனைவிட்டயோ எங்கிட்டயோ மொகங்குடுத்துப் பேசறதில்லே…! வீட்டுக்காரி சொன்னாள்! ஏன்னு தெரியலை.! உங்களுக்குத் தெரியாம, வேற வீடு வாடகைக்குப் போக முடி பண்ணீட்டோம்கறது உங்களுக்குத் தெரிஞ்சு போச்சோ என்னவோ…?! சொல்றேன்னு தப்பா நெனைக்காதீங்க, நாங்க, இங்க குடிவந்ததுக்கு அப்புறம் எனக்கு நெறைய பிரச்சனைகள்..! சரியா வேலை கிடைப்பதில்லை. உங்களுக்குக் கொடுக்க வாடகைக்கும் வழியில்லை..! அதுனால, வீட்டு புரோக்கர் ஒருத்தர்ட்ட சொல்லி கொறைஞ்ச வாடகைக்கு வேற வீடிருந்தா சொல்லச் சொல்லியிருந்தேன். அவர்தான் அடிக்கடி வந்து என்மனைவிட்ட வீடிருக்கற இடமெல்லாம் சொல்வார். கூட்டிட்டுப் போவார்! ஆனா, குடியிருக்கற எங்களை, எதோ கமிஷனுக்காக புரோக்கர் வீட்டை மாத்திவிட்டிட்டார்னு நீங்க நெனைக்கக் கூடாதுன்னுதான் ‘வீட்டுக்காரருக்குத் தெரியாம வாங்க!’ன்னு என் மனைவியைக் கூட்டிட்டுப் போய் வீடு காட்டுவார். வேலை முடிஞ்ச்சு நானும் அப்படியே போய்ப்பார்ப்பேன்!. வீடு அமைஞ்ச்சாதும் சொல்லலாம்னு இருந்தோம்! நீங்க கண்டு பிடிச்சிட்டீங்க போல?!’ என்று வெள்ளந்தியாய் அவன் சொல்ல, விவரம் கெட்டதனமாய் ‘வீட்டுக்காரர்ங்கறதை’ ஹவுஸோனர்னு நெனைக்காம ஹஸ்பெண்டுன்னு நான் கற்பனை செய்து கொண்டதை என்ன சொல்ல…?

Print Friendly, PDF & Email

1 thought on “சொல்லாதே… யாரும் கேட்டால்..!

  1. சிறுகதை டாடகாம்தான் பிறர் சொல்லுக்குப் பணியாமல் சுயமாய் முடிவெடுக்கிறது என்று நம்பி வந்தேன்.😪😪😪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *