பார்க்கப் பார்க்கச் சிரிப்பு வருது..! அடக்க முடியலை..!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 22, 2024
பார்வையிட்டோர்: 1,635 
 
 

மன நிம்மதிக்கு வழி ஒண்ணே ஒண்ணுதான். ‘மறக்கறதும், மன்னிக்கறதும்தான்!எல்லாருக்கும் இது தெரியும்! மறக்கக்கூட முடியும்! ஆனா, எல்லோராலும் எல்லாத்தையும் மன்னிக்க முடியுமா?!

நெல்லை பக்கத்தில் பாரம்பரியக் கலாச்சாரங்களைக் கத்துக்குடுக்கற பண்பு இருக்கே அது தனித் தன்மை வாய்ந்தது. ‘பொங்கல் தமிழர் திருநாள்னு’ பீத்தீட்டா மட்டும் போதாது! அதை, அதன் பாரம்பரியப்படி வைக்கணும்! கொண்டாடணும்!

வாசலில் ஒரு பத்து நாள் முன்னாடியே மண்ணில் குழைத்துப் போட்ட அடுப்புக் கட்டிக்கு சாணமும் காவியும் சுண்ணாம்பும் பூசி அந்த அடுப்புகட்டி வைத்து சூரிய உதயத்துக்கு முன்னாடியே அதில் பொங்கல் விடுவது என்பது அவர்கள் ஊர் வழக்கம். அதெல்லாம் இன்னைக்குக் காத்தோட போயிடுச்சு! அதெல்லாம் தப்பில்ல, சின்னஞ் சிறுசுகளுக்காகவே கவுன் போட்ட வயசுப் பெண்களுக்காக ‘சிறுவீட்டுப் பொங்கல்னு’ ஒண்ணு வைப்பாங்க அந்தப் பாரம்பரியம்மிக்க பண்பு தொலைஞ்சதுததுதான் இன்று நினைத்தாலும் ‘நெஞ்சு பொறுக்குதில்லை!’.

சின்னஞ்சிறு பிள்ளைகள் அடுப்புக் கூட்டி விளையாடுமே அந்த பாவாடைப் பிஞ்சுகளுக்கு, பானைபிடிக்கக் கற்றுத் தரும் கல்விக் கலாச்சாரம்தான் ‘சிறுவீட்டுப் பொங்கல்’.

பார்க்கப் பார்க்க சிரிப்பு வருது அடக்க முடியலை…! அன்னைக்கு வாசலில் இருந்த களைச்செடிகளின் இலையைக் கிள்ளி எடுத்து மணலைச் சோறாக்கி, செப்புச் சட்டியில் போட்டுச் சோறு சமைத்தவள் சுபாஷிணி!. அவளுக்கு அவள் பாட்டிதான் சிறுவீட்டுப் பொங்கலன்று வாசலில் சின்ன அடிப்புக் கட்டியில் சுள்ளிகளை வைத்து அடுப்பு மூட்டி, குட்டிப் பானையில் பாலைக் காய்ச்சவும், சர்க்கரைப் பொங்கலையும் வைக்கவும், காவியில் வரைந்த சின்ன வீட்டுக்குள் சமைக்க கற்றுத் தந்தாள். இன்று அந்தச் சிறுமிதான் புகுந்த வீடு போய் கேஸ் அடுப்பில் பத்து பேருக்கு சமைத்துப்போடும் சாமர்த்திய சாலியாகிவிட்டாள்.

அன்றைக்கு பார்க்கப் பார்க்க சிரிப்பு வருது, அடக்க முடியலை…! நீ… பொங்கிப்போட்டு திங்கறதெப்போ எனக்குப் புரியலைனு பரிகாசம் பண்ணின அவள் அப்பாதான், மகளின் பேரைச் சொல்லி, ‘சுபா நீதான் கூட்டாஞ்ச்சோறு நல்லாச் சமைப்பாயே? இன்னைக்கு மத்தியானம் அதையே பண்ணீடேன்!’ என்று சொல்லிக் காத்திருந்தார்.

செப்புச் சட்டியில் களைச் செடியைக் கறியாக்கியவள் இன்னைக்கு காய்கறியோடு கூட்டாஞ்சோறு சமைக்கிற அளவுக்கு கைதேர்ந்திருக்கிறாள். பானை பிடித்தவளை பாக்கியசாலியாக்கினாள் பாட்டி! கற்றுக் கொடுத்துப் போன பாட்டி இன்று இல்லை என்றாலும், அவள் படிப்பித்துப்போன பண்பு பாரம்பரியம் என்றும் தொடர்கிறது.

‘மூத்தோர் அருமை’ – இருக்கையில் நெறுக்குகிறது! இறந்தபின்தான் உருக்குகிறது!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *