பெர்பெக்ஷன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: July 2, 2024
பார்வையிட்டோர்: 905 
 
 

“வண்ண நிலவும் – உன்னை
வட்டமிட்டு சிறைபிடிக்குமடி 
உன்னழகை மறைத்துவைக்க…” 

அடடா என்ன கவிதை மிக அருமை. என்  வாழ்க்கையில் நான் எதிர்பார்க்கும் வரிகள். ஒரு பெண்ணை வர்ணிக்கும் போது இப்படி தான் இருக்கணும். 

“அடியே இளக்கியா! இன்னும் எவளோ நேரம் ஆப்பிஸ்லே புக் படிக்க போற, வீட்டுக்கு போலாம் வாடி. வேலை நாலு மணிக்கே முடிஞ்சது. நீ புத்தகம் படிக்கணும் சொல்லி லேட் பண்றே?” மாலினியின் குரல் அது.  

“சரி வரேன்” என்றேன். 

இருவரும் நடந்து பஸ் ஸ்டாப் சென்றோம். “அப்படி விழுந்து விழுந்து என்னத்த படிச்ச?” என்ற கேள்வியை மாலினி கேட்டாள். 

“அதுவா, பெண்ணை  வர்ணிக்கும் காதல் கவிதை டி. அந்த கவிதை எவளோ அருமையா இருந்தது தெரியுமா?” என்று மாலினியின் கேள்விக்கு பதில் கூறினேன். 

“இந்த டாபிக்  பத்தி பேச ஆரம்பிச்சிட்டியா?. இப்படியே எத்தன நாள்தான் நீ பேசுறனு பாக்குறேன்” என்றாள். 

“என்னோடு லைப்ளே பெர்பெக்ஷன் ரொம்ப முக்கியம். பாரு மாலினி, என்னோட பாட்னர் Mr.பெர்பெக்ட் தான்  வருவான்” என்னுடைய பதிலை கேட்டு நக்கலாக சிரித்தவாறு பேருந்து வருகின்றதா என்று பார்த்தாள் மாலினி. 

மீண்டும் பேச தொடங்கினாள். 

“அப்புறம் இளக்கியா?” என்று என்னை அழைத்தவாறு சிரித்தாள். 

“என்னடி சொல்லு?”  

“உன்னோட ரோமியோ எங்கே காணும்?” என்று கேட்டு என்னை பார்த்து சிரித்தாள். நான் அவளின் கேள்விக்கு ஒன்றும் பதில் கூறாமல் சாலையை பார்த்துக் கொண்டிருந்தேன். 

மீண்டும் மாலினி என்னை பார்த்து “பதில் சொல்லுடி” என்று பதில் கூறவைக்க முயற்சி செய்துக் கொண்டிருந்தாள்.  

“ஷட்டப் மாலினி. இன்னிக்கு தான், நான் அவன் தொல்லை இல்லாமே சந்தோசமா இங்கே  இருக்கேன்.  நீ அவனை பத்தி பேசி என்னையே கோவம் படுத்தாதே புரியுதா” என்றவாறு கோவத்துடன் பேசி கொண்டிருக்கும் பொழுதே ஒரு மோடர் எங்களின் முன் வந்து நின்றது. எங்கையோ பார்த்த சாயல் இருந்தது, யார் என்று இருவரும் திகைத்து பார்த்தோம். தலையில் அணிந்திருந்த தலைகவசத்தை அவிழ்த்தபோதுதான் தெரிந்தது என்னை தொல்லை செய்ய வந்திருக்கும் அந்த ரோமியோ என்று. அவன் முகத்தை பார்த்தவுடன் எனக்கு கோவம் தலை உச்சியை எட்டியது.  

“ஹலோ டியர் இலக்ஸ். அவ் அர் யு டியர்” என்று மெல்லிய குரலில் என்னை பார்த்து கேட்டான். 

அவன் முகத்தை பார்க்காமல் கோவத்துடன் நின்றுகொண்டிருந்தேன். மாலினியோ “அவா நல்லதா இருக்கா, நீ ஏன் இப்போ இங்கே வந்தே. அவளுக்கு தான் நீ வந்தாலே புடிக்கத்தே. அப்புறம் ஏன் வந்து டிஸ்டர்ப் பண்ற மேன் நீ”. 

“ஒரு நாள் அவளுக்கு என் காதல் புரியும். அதான் அவளை பார்க்க தினமும் வரேன்” என்று அவன் கூற. நான் பதில் பேச தொடங்கினேன் “அதுலாம் கனவிலும் நடக்காது சார். நா உங்களை காதலிக்க வாய்பே இல்ல. சும்மா மனசுளே ஆசைய வளக்குறேன், கோழிய வளக்குறேன் சொல்லிகிட்டு இங்க வராதிங்க, புரியுதா சார்” என்று ஆவேசத்துடன் பதில் கூறினேன். 

“என்னை சார் என்று மட்டும் சொல்லாதிங்க. நான் உன்னை 5 மாசமா காதலிக்கிறேன் இளக்ஸ். உன்கூட பேசலனா என்னாலே சாப்பிடவே முடியல” என்று அவன் கூற பதிலுக்கு மாலினியோ “ஏன் காசு இல்லையா” என்று அவனின் வார்த்தைக்கு  நக்கலாக பதில் கூறினாள். 

“கொஞ்சம் நேரம் ரெண்டு பெரும் அமைதியா இருக்க முடியுமா. பிளிஸ் சார் என்னை டென்ஷன் பண்ணாதிங்க. இப்போ இங்கு இருந்து கிளம்புங்க” கூறியவாறு பேருந்து வருவதை பார்த்து சற்று முன் நகர்ந்து சென்றேன். அவனிடம் ஒன்றும் கூறாமல் பேருந்தில் இருவரும் ஏறினோம். 

பேருந்தில் இருவரும் வீட்டிற்க்கு செல்லும் வழியில் மாலினி ஏன் அவனை எனக்கு புடிக்கவில்லை. என்ன காரணம் என்று நச்சரித்துக்கொண்டே வந்தாள். 

“காரணம் தானே? இப்போ சொல்லுறேன் கேளு. அவன் முகத்தை பார்த்தியா எவளோ எண்ணெய் வழியிது. முகத்தை அப்படி வைத்திருந்தால் யாருக்கு பிடிக்கும். அவன் முகத்தில் இருக்கும் எண்ணையை எடுத்து தலையிலே போட்டால் தலையை நல்ல வாரி விடலாம் போல. உனக்கே தெரியும் எனக்கு பெர்பெக்ஷன் ரொம்பே முக்கியம். கொஞ்சம் கூட பொருந்தாது டி” என்றதும்  

மாலினி “பெர்பெக்ஷன் வாழ்க்கையிலே முக்கியம் இல்லை, நல்ல மனசுதா முக்கியம்” என்று கூறியதும், “அப்படினா நீயே அவனை கல்யாணம் பண்ணிக்கோ” என்று மறுவார்த்தை கூறிவிட்டு ஜன்னல்  வெளியே பார்க்க தொடங்கினேன். மறுவார்த்தை பேச முடியாமல் மாலினியோ அமைதியாக இருந்தாள். 


இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் வேளைக்குச் செல்லும் வழியில் அவனிடம் என் காதலை சொல்லிவிட வேண்டும். நான் எதிர் பார்க்கும் பெர்பெக்ட் மேச் அவன் தான். நான் நினைக்கும் இந்த விஷயத்தை மாலினியிடம் சொல்லிவிடலாமா? இல்லை வேண்டாமா? அவள் என்ன நினைப்பாள் என்ற சிந்தனையுடன் பேருந்தில் பயணித்து கொண்டிருந்தேன். 

“என்ன யோசனை பலமா இருக்கு. என்ன விஷயம்?” என்று என் முக பாவனையை புரிந்து கொண்டு கேள்வி கேட்டாள். 

அவளிடம் நான் நினைப்பதை கூறிவிட வேண்டும் என்று,

“உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். நம்ம லாயர் ஒபிஸ்லே  எக்சிடேன்ட் டிபாட்மேன்டில்  வேலை செய்யும் மதியை எனக்கு புடிச்சுருக்கு டி” என்று நான் கூற,

“என்னடி சொல்லுறே, அப்போ ரோமியோக்கு துரோகம் பண்ணிட்டியா நீ” என்று எனக்கு கோவம் வரும் அளவிற்க்கு கூறிவிட்டு சிரித்தாள். 

“அடியே யார் சொன்னது அவனை நான் காதலிக்கிறேன் என்று. இதோ பாரு மீண்டும் இந்த மாதிரிலாம் என்கிட்ட பேசாதே. உனக்கு வேணும்னா அவனை நீயே காதலிச்சிகோ”  என்றவாறு கோவத்துடன் பேசி சாலையை பார்த்தேன். 

பேருந்து நிலையத்தை அடைந்ததும் இருவரும் ஆப்பிசை நோக்கி நடைபோட்டோம். போகும் வழியில் என் மனதிற்குள் அவனிடம் என் காதலை கூறிவிட வேண்டும் என்ற வேட்கை மட்டுமே. அவனை காண நான் ஆவலாக இருந்தேன். ஆப்பிசின்  நுழைவாசலை அடைந்ததும் அவனை காணவேண்டும் என்று கண்கள் அவனை தேடத் தொடங்கியது. மேல் மாடியை நோக்கி நடைபோட தொடங்கினேன். அவனை பார்ப்பதற்குள் வேறு வேலை ஒன்று வந்தது. வேலையை முடித்தவுடன் அவனிடம் என் காதலை சொல்லிவிடலாம் என்று நினைத்தவாறு வேலையைச் செய்ய தொடங்கினேன். 

மதிய உணவு நேரம் வந்தது. இந்த தருணம்  சொல்ல வேண்டும் என்று மனதில் சொல்லிக்கொண்டு அவன் இருக்கும் திசையை நோக்கி நடந்தேன். கண்ணுக்கு எட்டிய தூரத்தில் அவன் அறையில் அவன் வேலை செய்து கொண்டு இருந்தான். அவன் அறைக்குள் நுழைத்தேன். 

“ஹலோ மதி. அவு ஆர்  யு மேன் ?” என்று முதலில் கேள்வியை எழுப்ப தொடங்கினேன். 

“ஆம் குட்” என்றான். மேலும், நான் பேச தொடங்கினேன். 

“உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் நினைக்கிறேன்  இப்போ சொல்லலாமா?“ என்றதும் “ஓ! எஸ்! சொல்லுங்க” என்றான். 

“உங்களை நான் இங்கே வேலை செய்ய வந்த நாளே இருந்தே பாக்குறேன், ஆட்டிதுட், அழகு எல்லாமே என்னையே கவர்ந்தது. அது மட்டும் இல்லமே உங்களை எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு” என்று வெட்கத்துடன் அவன் கண்களை பார்த்து என் மனதிற்குள் ஓடிய வார்த்தைகளைக் கூறினேன். 

நான் கூறிய வார்த்தையை கேட்ட அவன் திகைத்தவாறு  என்னை பார்த்தான். சற்று நேரம் அமைதியாய்  என் முகத்தை பார்த்தவுடன் பேச தொடங்கினான். 

“நீங்க சொன்ன வார்த்தையைக் கேட்டு நான் அதிர்ச்சி ஆகிடேன். அர் யு சுவர்?” வியந்தவாறு கேள்வி கேட்டான். 

நான் சிரித்தவாரு  “உண்மையா தான் சொல்லுறேன், எனக்கு உங்களை புடிச்சுருக்கு. உங்களை கல்யாணம் பண்ணிக்கணும் நினைக்கறேன்” என்றேன்.

“எனக்கு ரெண்டு நாள் டைம் குடுங்க, யோசிக்கணும். பட் எனக்கும் உங்களை புடிக்கும்.” என்று தயக்கத்துடன் கூறினான் மதி. 

பல நாள் நான் தவம் கிடந்த வார்த்தையைக் கேட்டவுடன் ஆனந்த வெள்ளத்தில் முழ்கினேன். “தேக் யோர் டைம்! நீங்க பொறுமையா சொல்லுங்க, நான் வரேன்” என்று கூறிவிட்டு நான் எதிர்பார்த்த பெர்பெக்ட் பாட்னர் கிடைக்க போறான் என்ற ஆசையுடன் அவனின் அறையை விட்டு என் அறைக்கு சென்றேன். வீடு திரும்பும் வழியில் மாலினியிடன் நடந்தை கூற வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். 

வேலை முடிந்ததும் மாலினியை அழைத்து பஸ் ஸ்டாப் சென்றேன். 

“இன்னிக்கு என்ன நடந்தது தெரியுமா. அவன் என்ன சொன்ன தெரியுமா” என்றேன்  

“நான் உன் பெர்பெக்ட் மேட்ச் இல்லன்னு சொல்லிருப்பான் அதானே” என்றாள். 

“உனக்கு பொறாமை டி” 

“ரொம்பதான், எனக்கு அப்படிலாம் இல்லே. சொல்லு விஷயத்தை” என்றாள். 

“அவனுக்கும் என்னைய புடிச்சுருக்காம், பட் டைம் கேட்டான். கண்டிப்பா ஒகே சொல்லிருவான் பாரேன்” என்றேன்  

“அப்படியா நல்லது நடந்தா சரிதான்” என்று கூறியதும் பேருந்து வந்தது, நாங்கள் வீடு திரும்பினோம். 


மதி சொன்ன அந்த இரண்டாவது நாள் இன்றுதான். என்ன சொல்ல போகிறான்  என்ற குழப்பம் என்னுள். ஆபிஸ் போனவுடனே அவனிடம் பதிலைக்  கேட்டுவிட வேண்டும். ஆப்பிசை அடைந்தேன். என் கால் முதலில் அவனின் அறையை நோக்கி சென்றது. புன்னைகையுடன்  அறையில் அவன் வேலை செய்துக் கொண்டிருந்தான். நான் கதவை திறந்து உள்ளே சென்றேன். 

“ஹலோ மதி” என்று முதலில் அழைத்தேன்.

“மோர்னிங் இளக்கியா, என் பதிலை கேட்கதானே வந்திங்க” என்று கேள்வி கேட்டவாறு என்னை பார்த்தான். 

“எஸ், ஐ வான்ட் டு நோ டி அன்சர்” என்று பயத்துடன் அவனிடம் கேட்டேன்.  

அவன் அறையில் எதையோ தேடிக் கொண்டிருந்தன். திடீர் என்று பொக்கேயை எடுத்து மேசையில் வைத்து “ஐ அல்சோ லைக் யு, இந்த பொக்கே உனக்குதான்” என்று புன்னைகையுடன் கொடுத்தான். 

நான் அந்த நொடி சந்தோச கடலில் மிதக்க தொடங்கினேன்.  “நான் இந்த வார்த்தைக்கு ரொம்ப நாள் காத்திருந்தேன். மதி, என்னோடு பெர்பெக்ட் பாட்னர் நீங்க மட்டும் தான்”.  

“இளக்கியா கேக்குறேன் தப்பா எடுத்துக்காதீங்க, நம்ம நாளைக்கு ஔடிங் போலாமா. கொஞ்சம் பேசலாம் அதான்” என்றதும், “கண்டிப்பா போலாம்” என்றேன். 

என் வாழ்க்கையில்  நடந்த இந்த நல்ல விஷயத்தை உடனடியாக மாலினியிடம் கூறினேன். அவளும் வாழ்த்து கூறினாள். 

மறுநாள் இருவரும் அருகில் இருக்கும் உணவகத்திற்கு சென்றோம்.  

“சொல்லுங்க மதி” என்றேன்.

“எப்படி உங்களுக்கு என்னையே புடிச்சது” என்று அவன் கேட்க,

“என் லைப் பாட்னர் பெர்பெக்டா  இருக்கனும் என்று  எனக்கு ரொம்ப ஆசை, எனக்கு காச விட அழகுதான் முக்கியமா கருதுவேன், நீங்கே நீட்டா, அழகா, முடிலாம் நல்லவாரி  எனக்கு புடிச்ச மாதிரி இருந்திங்கே. அண்ட் ஆல்சோ வேலையில  உங்க நேர்மையான குணமும் புடிச்சது எனக்கு.”  

“ஒ! ஐ சி! நானும் உங்களை முன்னே இருந்தே பாக்குறேன். எனக்கும் உங்களை ரொம்ப புடிக்கும். ஆனா சொல்ல பயமா இருக்கும். நான் எதையும் உன்கிட்ட இருந்து மறைக்க மாட்டேன்” என்று கூறியவாறு சிரித்தார். 


வேலை முடிந்து வீடு திரும்பும் வேளையில் மாலினி “மதி என்ன சொன்னாரு” 

“அவருக்கு என்னைய ரொம்பே புடிக்கும்னு சொன்னாரு. அப்புறம் என்கிட்ட இருந்து எதையும் மறைக்க மாட்டேன் சொன்னாரு  டி, பார்த்தியா மாலினி பைனலி நா சொன்ன மாதிரி பாட்னர் வந்தாச்சு. இதுக்கு அப்புறம் கல்யாணம் தான்” என்று சந்தோசமாக பேசிகொண்டிருந்த வேளையில், 

என் சிரிப்பை அழிக்கும் வகையில் அந்த ரோமியோ மீண்டும் என் முன் வந்தான். அவனை எனக்கு புடிக்கவில்லை என்று பல முறை கூறியும் அவன் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் மீண்டும் என் முன் வந்தான். 

“இங்கே பாரு மென், எனக்கு வேற பெர்சன் கூட கல்யாணம் நடக்க போகுது. எனக்கு புடிச்ச பெர்சென்னை நான் பார்த்துட்டேன். நீ எல்லாம் எனக்கு பெர்பெக்ட் ஆகவே மாட்டே புரியுதா? இங்கே இருந்து கிளம்பு” என்று அவனை என் வார்த்தையால் எரித்து பேசினேன். 

எனது வார்த்தையை கேட்டவுடன் ஒன்றும் பேசாமல் அந்த இடத்தை விட்டு சென்றான்.  


இருவர் வீட்டிலும் எங்களின் காதலை பற்றி கூறி கல்யாண ஏற்பாடுகளைச்  செய்ய தொடங்கினோம். காதலித்த 2 மாதத்திலே கல்யாணம் செய்வது சரி இல்லை என்று பலரும் சொன்னாலும் நான் எதிர்பார்த்த அந்த தன்மைனுடைய பையன் எனக்கு கிடைத்துவிட்டான். ஆகவே,  நான் என் அழகை இழப்பதற்குள் கல்யாணம் பண்ணி கொள்ள வேண்டும் என்ற எண்ணம் என்னுள் அலைபாய்ந்துக் கொண்டுருந்தது. அவனுடன் பழகிய இந்த காலம் அவனை நான் நன்கு புரிந்து கொண்டேன். வெளியில் சென்றால், நெருங்க விடாமல் இருக்கும் அவனின் பண்புகள், அவனின் அழகான கண்கள், கருமையான முடி இவை அனைத்தும் என்னை மேலும் கவர்ந்துக் கொண்டே இருந்தது. 


எங்களின் கல்யாண ஏற்பாடுகள் நடக்க தொடங்கியது. எனது ஆசை கல்யாணம் என்பதால் ஒவ்வொரு பொருட்களையும் நானே பார்த்து வாங்க தொடங்கினேன். 

“மாலினி எனக்கு சில பொருட்கள் வாங்கணும், லிட்டல் இந்தியா போயிட்டு வரலாம் வாடி” என்று அவளை அழைத்துக் கொண்டு சென்றேன். அங்கு சென்றவுடன்,  

“இளக்கியா அங்கே பாரேன், உன் ஆளோட கார் நிக்கிது, இங்கே என்ன செய்யுறாரு” என்று அவள் என்னிடம் கேட்டாள்.  

“கண்ணே தொறந்து பாரு டி, அது சலோன். முடி வெட்ட வந்துருப்பாரு. என் அழகுகுக்தான் கருமையான முடி இருக்கே சரி, வா போய் பாக்கலாம்” என்றேன். 

கடை வாசலின் முன் நின்ற மாலினி , என்னை மறைத்தவாறு  கண்ணாடிவழியாக மதியை பார்த்தாள்.  

திடீர் என்று “இளக்கியா உன்னோடு ஆளு முடி இல்லாமே பார்த்திருக்கியாடி?” 

“ஏன் அவருக்குத்தான் கருமையான முடி இருக்கே, அப்புறம் ஏன் அவரு முடி இல்லாமே இருக்க போறாரு”   

“அப்படினா இங்கே கொஞ்சம் பாருடி” என்றதும், 

அவளை அந்த கணமே தள்ளி விட்டு நான் கண்ணாடி வாயிலாக பார்த்தபோது, நான் பார்ப்பது மெய்யா இல்லை பொய்யா என்ற கேள்வியுடன், மதியின் கோலத்தை பார்த்தேன். மதி தோப்பா முடியை அணிந்து கொண்டிருந்தான்.  

அப்போ அவன் தலையில் இத்தனை நாள் இருந்தது? அப்போ நான் எதிர் பார்த்த பெர்பெக்ஷன்? என்ற கேள்வியுடன் நான் கண்ணீர் மல்க கடைவாசலின் முன் நின்று கொண்டிருந்தேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *