கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 13, 2024
பார்வையிட்டோர்: 106 
 
 

(2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நீண்டு வளைந்து சென்ற அந்தச் சாலைப் பகுதியில் தன் வாடகை உந்துவண்டியை விரைவாக ஓட்டிக் கொண்டிருந்தான் சங்கர். சாலையின் இரு புறமும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த போதிலும், யாருமே அவனுடைய வாடகை உந்து வண்டியில் ஏறுவதாகத் தெரியவில்லை. இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்ற வினாவினைத் தொடுத்தபடி வந்த அவனுடைய கண்களில் தன் வண்டியில் பளீச்சென்று தொங்கிய காலண்டர் அதற்குப் பதிலாக அமைந்தது. “ம் தேதி ஐந்து தானே போயிருக்கும்?” என எண்ணிய மறுகணமே “ஆகுது. அதற்குள் சம்பளப் பணம் எல்லாம் தீர்ந்தா இப்பொழுது தான் அரசாங்க ஊழியர்களுக்கு பன்னிரண் டாம் தேதிக்குத் தானே சம்பளம் போடுகிறார்கள். மாதக்கடைசி. அதுதான் வாடிக்கையாளர்களின் தரிசனம் நமக்குக் கிடைக்கவில்லை?” எனத் தனக்குள் சமாதானம் செய்து கொண்டான்.

இனி இந்தப் பாதை வழியே செல்வதில் யாதொரு பயனும் இல்லை எனக் கருதியவனாய் வழக்கமாகச் செல்லும் ஆச்சர்ட் சாலைக்குத் தன் வாடகை உந்துவண்டியை கிளப்பினேன். சுற்றுப்பயணிகளைக் கவர்ந்திழுக்கும் ஆச்சர்ட் சாலையில் சவாரிகளைச் சுலமாக பிடித்துவிட முடியும் என்ற நம்பிக்கை அவனுக்கு. மாதக் கடைசியின் போதெல்லாம் அவன் இந்தப் பகுதிக்குச் செல்வது வாடிக்கை. அவன் வண்டி நேரே ‘சி.கே.தேங்’ அருகிலுள்ள லக்கி பிளாசா டாக்ஸி ஸ்டேஷனுக்குச் சென்றது. அவனுக்கு முன்னால் இரண்டு டாக்ஸிகள் சவாரிக்காக நின்று கொண்டிருந்தன. அவர்கள் போன பிறகுதான் தன் முறை வரும் என்ற பெருமூச்சோடு வண்டியை நிறுத்தினான் சங்கர்.

“அப்பாடா! இங்கே ஒரு பத்து நிமிடத்துக்கு ஓய்வெடுக்கலாம் என மனத்துக்குள் கூறியபடி தலையை இப்படியும் அப்படியும் ஆட்டி, உடலை ஒரு குலுக்கு குலுக்கினான். அப்படியும் அந்தப் பேரங்காடியை விட்டு ஒரு சீனமாது தன் இரண்டு வயது குழந்தையுடன் முதலில் நின்று கொண்டிருந்த டாக்ஸியில் ஏறினாள்.டாக்ஸி நகர்ந்தது. அந்த டாக்ஸி நகர்ந்த போதிலும் அதில் பயணம் செய்த அந்த இரண்டு வயது நிரம்பிய குழந்தையைப் பற்றியே அவன் மனம் வட்டமிட்டது.

“அந்தக் குழந்தைக்கு என் மகன் ரவியின் வயது இருக்கும். அந்தக் குழந்தையின் கையில் ஒரு பெரிய பொம்மை. அதுவும் கரடிக் குட்டி பொம்மை. அந்த மாதிரி ஒரு பொம்மையை நம் ரவிக்கும் வாங்க வேண்டும்” என்று எண்ணியவனாய்த் தன் இருக்கைக்கு அடியில் உள்ள ஒரு சிறு பெட்டியைத் திறந்து பார்த்தான். அதனுள் சில நோட்டுகளும் கொஞ்சம் சில்லறையும் இருந்தன. அதிலுள்ளதை எண்ணிப் பார்த்தான். சரியாகப் பதிமூன்று வெள்ளி ஐம்பத்தைந்து காசு இருந்தன. “ம் அந்த மாதிரி கரடிக்குட்டி பொம்மை வாங்கக் குறைந்தது முப்பது வெள்ளியாவது வேணும். அடுத்த வாரம் அவனுடைய பிறந்த நாள் வரப் போகிறது. அது வருவதற்கு முன் நான் எப்படியாவது பணத்தைச் சேர்த்து அதை வாங்கி வேண்டும்” என உறுதி கூறினான்.

ரவியை நினைக்கும்போது, சங்கரின் உள்ளம் பெருமிதத்தால் பூரித்தது. தன் குலப் பெருமையை நிலைநாட்ட வந்தமகன், தன்னுடைய ஒரே வாரிசு, இரத்தத்தின் இரத்தம், மொத்தத்தில் அவன் பிறந்த வேளை தன் வாழ்க்கையில் எல்லாமே கைகூடி விட்டது என்றதொரு நம்பிக்கை. ஆம்! வாடகை உந்துவண்டியை ஓட்டிக் கொண்டிருந்த சங்கர் சொந்தமாக ஒர் உந்து வண்டியைத் தவணை முறையில் வாங்கும் அளவுக்கு உயர்த்திருக்கிறான் என்றால் அது ‘ரவி பிறந்த நல்ல வேளை தானே?

அவன் பிறந்த ஒரே மாதத்தில் உந்து வண்டிக்குச் சொந்தக்காரன் ஆனான். மூன்றறை அடுக்குமாடி வீட்டில் இருந்த அவன் இப்பொழுது ஐந்தறை வீட்டில் குடியிருக்கிறான். அதுமட்டுமா? பிரிந்து போன அவன் குடும்பத்தை ஒன்று சேர்த்தவன் ரவிதானே? சங்கரின் உள்ளம் தன் கடந்த கால வாழ்க்கையை எண்ணி அசை போட்டது.

சங்கருக்கு அப்போது இருபத்தைந்து வயது இருக்கும். கட்டிளங்காளை, பாப்பர்களைச் சுண்டி இழுக்கும் ஆணழகன் என்று சொல்ல முடியாவிட்டாலும் அசிங்கம் என்று ஒதுக்கிவிடும் அளவுக்கு மோசம் இல்லை. மாநிறம் நல்ல உயரம், சுமாரான அழகு, கார் மெக்கானிக்காக வேலை செய்த அவனுக்குக் கதிரேசனின் நப்பு கிட்டியது.

சங்கரும் கதிரேசனும் ஒரே கம்பெனியில் வேலை செய்ததால் அவன் அடிக்கடி கதிரேசனின் வீட்டிற்குச் செல்வது வழக்கம். அப்போது தான் கதிரேசனின் தங்கை கவிதாவின் பழக்கம் அவனுக்கு ஏற்பட்டது. கவிதா நல்ல சிவப்பு, கயல்விழி கொண்டவள். நீண்ட கூந்தல். அவள் சிரிக்கும்போது தோன்றும் அந்தக் கன்னக்குழி, அவளது அழகுக்கு மேலும் அழகு சேர்த்தது. அவள் அழகில் சங்கர் மயங்கினான். தன் உள்ளக்கிடக்கையைக் கவிதாவிடம் தெரிவித்தபோது அவள் மறுப்புத் தெரிவிக்கவில்லை.

இருவரது காதலும் வளர்ந்து அது இரு வீட்டாரின் காதிலும் எட்டியது. கவிதாவின் வீட்டில் எந்த மறுப்பும் இல்லை. ஆனால் சங்கரின் பெற்றோர். குடியே முழுகிவிட்டதுபோல் கூச்சலிட்டனர். அவர்களின் கூச்சலுக்குக் காரணமும் இருந்தது. சங்கரின் அத்தை மகள் புவனா பெற்றோரை இழந்த அவளுக்கே சங்கரை மணமுடிப்பதென அவன் பெற்றோர் எண்ணி இருந்தனர். தங்கள் மனக்கோட்டையில் மண் விழுந்துவிட்ட வயிற்றெரிச்சலில் அவன் காதலுக்குத் தடை விதித்தனர். யார் என்ன சொன்னாலும் முன் வைத்த காலைப் பின் வைப்பதில்லை என்ற வைராக்கியத்தில் சங்கர் கவிதாவின் கரத்தைப் பற்றினான்.

சங்கருக்கும் கவிதாவுக்கம் திருமணம் நடந்து அவர்கள் உறவு தொடங்கிய அதே வேளையில் சங்கரின் பெற்றோர் அவன் உறவை முறித்தனர். அன்று முதல் அவனுக்கும் பெற்றோருக்கும் இடையே இருந்த தொடப்பு அறுந்தது, சங்கர் தனிக்குடித்தனம் நடத்தினான். அதன் பிறகு நடந்த ஒவ்வொரு சம்பவமும் அவனுக்கும் அவன் பெற்றோருக்கு உள்ள உறவை ஒட்ட முடியாது அளவுக்குப் பிரித்திருந்தன.

ஆம்! புவனாவுக்கு வேறொரு நல்ல வரனாகப் பார்த்துத் திருமணம் நடத்தினர் சங்கருடைய பெற்றோர். அதற்கு அழைப்பு கூட அவனுக்கு அனுப்பவில்லை. கேள்விப்பட்டுச் சென்ற இடத்தில் அவமானம் தான் மிஞ்சியது. அந்தச சம்பவத்திற்குப் பிறகு அவர்கள் உறவே வேண்டாம் எனத் தீர்மானித்திருந்தவனாய்வைராக்கியத்துடன் வாழ்ந்தான்சங்கர்.

இந்த வேளையில்தான் கவிதா கருவுற்றாள். அந்த விஷயம் காட்டுத்தீ போல் அவன் பெற்றோர் காதிலும் பரவியது. அவர்கள் மனம் மெல்ல இளகத்தொடங்கியது. இருப்பினும் ஒரு வீம்புடன் காலத்தைத் தள்ளினர். சங்கரும் தன்னுடைய மெக்கானிக் வேலையை விட்டு, வாடகை உந்து வண்டி ஓட்டத் தொடங்கினான். படிப்படியாகத் தன் வாழ்க்கைத் தரத்தை மெல்ல உயர்த்தத் தொடங்கினான்.

ரவி பிறந்தான், தன் பெயர் சொல்ல ஒரு பிள்ளை பிறந்ததில் சங்கருக்குப் பெருமை அந்தப் பெருமையைப் பங்கு கொள்ள அவன் பெற்றோரும் முன் வந்தனர். ஆம்! பேரன் பிறந்துவிட்ட மகிழ்ச்சியில் பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்தது. “ரவி…ரவி….” எனச் சங்கரின் பெற்றோர் கொஞ்சுவதும், “தாத்தா பாட்டி” என அவன் அவர்களைக் கட்டித் தழுவுவதும் கண் கொள்ளாக் காட்சி.

டக் என்று ஒலித்த சத்தத்தைக் கேட்டுத் திடுக்கிட்டுச் சுயநினைவுக்குத் திரும்பிய சங்கர் தனக்குப் பின்னால் திரும்பிப் பார்த்தான். தன் இருக்கைக்குப் பின்னால் ஓர் ஆங்கிலேய மாது பல பைகளைத் தூக்கிய வண்ணம் அமர்ந்து கொண்டிருந்தாள். “பார்க்கள் ரோட்’ என்று அவள் கூறிய சாலையை நோக்கித் தன் வண்டியை செலுத்தினான் சங்கர். வண்டி சிட்டெனப் பறந்தது. வண்டியில் அந்த ஆங்கிலேய மாது நம் நாடு கண்டுள்ள வளர்ச்சியையும், வளப்பத்தையும் புகழ்ந்து கூறினாள். அவள் பேச்சிலிருந்து அவள் நம் நாட்டிற்கு வந்த சுற்றுப்பயணி என்பதை சங்கர் நன்கு அறிந்தகொண்டான். அத்துடன் அவள் இன்றிரவு அமெரிக்காவுக்குப் பயணமாகிறாள் என்பதையும் அவன் அறிந்து கொண்டான்.

பேச்சுவாக்கில் அவள் வீட்டைப் பத்து நிமிடத்தில் வந்தடைந்தது கூடத் தெரியவில்லை. வண்டியை விட்டு அவள் இறங்கினாள். மீட்டரில் உள்ள தொகையைச் சங்கரிடம் கொடுத்துவிட்டு அந்த அழகிய பங்களாவினுள் நுழைந்தாள். சங்கரும் தன் பயணத்தைத் தொடர்ந்தான். வழியில் அவனுக்கு நல்ல பசி எடுத்தது. அப்போதுதான் சாப்பாட்டு நேரத்தையும் மறந்து தான் பணியில் மூழ்கி இருந்தது அவனுக்குத் தெரிய வந்தது. இனியும் தாமதிக்காது தான் வழக்கமாகச் சாப்பிடும் அந்தச் சாப்பாட்டுக் கடையை நோக்கி வண்டியைத் திருப்பினான். வண்டி தேக்கா சந்தையைக் கடந்து நேரே நோரீஸ் சாலையில் திரும்பியது. சாலையோரத்தில் வண்டியை நிறுத்திவிட்டுக் கடையினுள் நுழைந்தான்.

அந்தச் சாப்பாட்டுக் கடையில் கூட்டம் கொஞ்சம் குறைந்திருந்தது. சாப்பாட்டு நேரத்தைக் கடந்துவிட்டதால் இங்கொன்றும் அங்கொன்றுமாக ஒரு சிலர் அமர்ந்திருந்தனர். கடைக்காரரிடம் தனக்கு வேண்டிய உணவை ஆர்டர் கொடுத்துவிட்டு, அங்கிருந்த நாற்காலியில் போய் அமர்ந்தான். சிறிது நேரத்தில் ஆர்டர் கொடுத்த உணவு பரிமாறப்பட்டது. பசி தீர அதை புசித்தான். கடைக்காரரிடம் உணவுக்காகப் பணத்தைக் கொடுத்த சங்கர் மீண்டும் தன் பணியைத் தொடர வண்டியை நோக்கிக் சென்றான்.

உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்பதற்கொப்ப இலேசாக அசதியும் சோர்வும் அவனை வாட்டத் தொடங்கியது. அடுத்த வாரம் வரும் தன் மகனின் பிறந்தநாளைச் சிறப்புடன் கொண்டாட வேண்டும். அதற்குப் பணம் வேண்டும் என்ற தீர்க்கமான முடிவில் அவன் இருந்ததால் வந்த அசதியையும் சோர்வையும் எட்டி உதைத்தான். தன் இருக்கையில் அமர்ந்தபடி கைக்குட்டையால் முகத்தைத் துடைக்கத் தன் கால் சட்டைப் பையில் கைவிட்டபோது அதில் கைக்குட்டை இல்லை என்பதை உணர்ந்தான். கைகுட்டை எங்கே சென்றிருக்கக் கூடும்? காலையில் வண்டியை எடுத்தப்போ தன் இருக்கையைக் கைக்குட்டையால் தட்டிவிட்டது அவன் ஞாபகத்திற்கு வந்தது. ஒருவேளை அது அங்கே விழுந்திருக்குமோ என்று எண்ணியவனாய் இருக்கைக்கு அடியில் பார்த்தான். அங்கே இல்லை. பின்னால் இருக்கும் இருக்கையில் விழுந்திருக்குமோ என்று ஐயத்துடன் பின் சீட்டிலிலுள்ள கதவைத் திறந்து பார்த்தவன் கண்களுக்கு சிவப்பு நோட்டுக்கள் பல் இளிக்க ஒரு மணிபர்ஸ் திறந்து கிடந்தது.

யாருடையதாக இருக்கும் என்ற எண்ணத்தில் குனிந்து அந்தப் பர்சை எடுத்தான்.அமெரிக்க நோட்டுகள்,சிங்கப்பூர் நோட்டுகள் என நீட்டிக் கொண்டிருந்த பணத்தைப் படபடக்கும் நெஞ்சத்துடன் மெல்ல எண்ணினான். அமெரிக்க நோட்டுகள் முந்நூறும், சிங்கப்பூர் நோட்டுகள் ஆயிரத்து இருநூறு வெள்ளியும் சில சில்லறைகளும் இருந்தன. இந்தப் பர்ஸ் அவளுடையதாக இருக்குமோ? அந்த ஆங்கிலேய மாதுக்குச் சொந்தமானது.அவள் தான் கடைசியாக என் வண்டியில் ஏறியவள்.அமெரிக்க நோட்டுகளைப் பார்த்தால் அது சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் அவளுடையதுதான் என யூகிக்க அவனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. இந்தப் பர்சுக்கு உரியவள் அவள்தான் எனத் திட்டவட்டமாகத் தெரிந்திருந்தும் அவனால் எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாதவனாய்க் காணப்பட்டான்.

மனப் போராட்டத்தின் போது அவனுள் குடிகொண்டிருந்த நேர்மையும் நியாயமும் மெல்ல மெல்ல அவனை விட்டு தொடங்கின. அந்த மனத்தில் ஆசையும் மகனுடைய பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற வேட்கையும் கொடிகட்டிப் பறந்தன. பணம் பாதாளம் வரை பாயும் என்ற பழமொழி வழிக்கில் இருக்கும் போது, அது அவள் உள்ளத்தில் புகுந்து ஒரு கலக்கு கலக்கியதில் என்ன வியப்பு இருக்கப் போகின்றது? தன் மகன் பிறந்த வேளை தொட்டதெல்லாம் துலங்கியது போல இதுவும் தனக்கு ஈட்டித் தந்த குட்டி லாட்டரி என நினைத்தவனாய்க் கிடைத்த அதிர்ஷ்டத்தைக் தன் கால் சட்டைப் பையில் போட்டுக்கொண்டு, எவ்விதக் குற்ற உணர்வும் இல்லாமல் வண்டியை வீட்டை நோக்கிச் செலுத்தினான்.

வழக்கத்திற்கு விரோதமாக வீட்டின் வாசலில் அவன் தாயார் அவன் வரவுக்காகக் காத்திருந்தது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தாயாரின் முகத்தில் இருந்த கலவரமும், கலக்கமும் அவனுக்கு அதிர்ச்சியைத் தந்தன. “நடக்கக் கூடாதது நடந்துவிட்டதோடு? அந்த ஆங்கிலேய மாது காவற்காரரின் துணையுடன் தன்னைத்தேடி வந்துவிட்டாளோ?” என்று பயந்தவன் மறுவினாடி “சேச்சே! அவளுக்கு எங்கே நான் தங்கும் இடம் தெரியப் போகிறது? வீண் பிரமை” எனச் சமாதானம் செய்து கொண்டான்.இருப்பினும் அவன் முகம் பீதி அடைந்திருந்தது.தன் அச்சத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் “என்னம்மா ஏன் வெளியே நிற்கிறீங்க?” உள்ளே உட்காரக் கூடாதா… ஆமாம் வந்தவங்களை இப்படி வெளியே நிற்க வச்சிட்டு, கவிதா அப்படி என்னதான் செய்றா?” எனச் சற்றுக் கோபத்துடன் உரக்கச்சத்தம் போட்டான்.

அத்துடன் “கவிதா… கவிதா…” எனவும் குரல் எழுப்பினான்.”கவிதா இங்கே இல்லேயப்பா சங்கர்..உன் அப்பாவோட அவ ஆஸ்பத்திரிக்குப் போய் இருக்கா…” எனத் துக்கம் தொண்டையை அடைக்கக் கூறினார் சங்கரின் தாயார். “ஆஸ்பத்திரிக்கா? அவளுக்கு என்னம்மா?” எனப் பதற்றத்துடன் கேட்டான். ”அவளுக்கு ஒன்றுமில்லைசங்கர்.ஆனா நம்ம ரவிக்குத்தான்…”தாயார் சொல்லி முடிக்கவில்லை. அதற்குள் சங்கர் அப்படியே நிலை தடுமாறிப் போனான்.”குளியல் அறையில் உள்ள தொட்டியில் தண்ணீர் நிறைஞ்சு கிடந்திருக்கு. சொந்தமா குளிக்கறேன்னு சொல் ரவி அதில் விளையாடிக் கொண்டிருந்தான்.கொஞ்ச நேரம் பையன் சத்தமே இல்லை. என்னடா சத்தத்தைக் காணோம்னு சொல்லிக் கவிதா குளியல் அறையில் எட்டிப் பார்த்தா,தண்ணீர்த் தொட்டியில் குப்புற விழுந்து கிடக்கிறான்.இந்தக் கண்றாவியைப் பார்த்துப் பதறிப் போய்க் கவிதா எங்களுக்குப் போன் பண்ணினா. நாங்க வந்தோம் அதான் உன் அப்பாவை அவளோட அனுப்பி வைச்சேன். உனக்காகத்தான் நான் காத்திருக்கேன். சரி வாப்பா சங்கர், ஆஸ்பத்தரிக்குப் போகலாம்.ஆண்டவா! என்பேரனுக்கு ஒன்னும் ஆகக் கூடாது….”என அழுதபடிச் சங்கரின் தாய் ஆண்டவனை இறைஞ்சினார்.

சங்கர் ஏதும் கூறச்சக்தியற்றவனாக தாயைப் பின் தொடர்ந்தான். இருவரும் மருத்துவமனையை அடைந்தனர். அங்கே கவிதா கண்ணீருடன் இருக்கையில் அமர்ந்திருந்தார். அவளுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருத்தார் சங்கரின் தந்தை அதுவரை உறுதியுடன் இருந்த சங்கர்,மனைவியைப் பார்த்த மாத்திரத்தில் உறுதி தளர்ந்தனாய்க் ‘கோவென’ அழத் தொடங்கினான். “ஆண் பிள்ளையான நீ அழலாமா? நீயே இப்படி நடந்துக்கிட்டா கவிதாவுக்கு யாரப்பா ஆறதல் சொல்றது?” எனத் தந்தை சங்கரின் கண்ணீருக்கு அணை போட்டார்.

மகனைப் பற்றி விசாரித்தான் சங்கர்.” இப்போ எதுவும் சொல்றதுக்கு இல்லைன்னு டாக்டர் சொன்னாரு. எதுக்கும் தைரியமாக இருங்க. நான் வணங்குகிற தெய்வம் நம்மைக் கைவிட மாட்டாருங்க. நாம யாருக்கு என்ன தீங்கு செய்தோம்? நம்ம மகனுக்கு ஒன்னும் ஆயிடாதுங்க” எனத் தன் காட்டிக் கொள்ளாமல் சங்கருக்கு ஆறுதல் கூறினாள். கவிதா “ஆமாம் கவிதா நாம யாருக்கு என்ன தீங்கு செய்தோம்?” என நம்பிக்கையில் கண்ணீர் வடித்த தன் முகத்தைத் துடைக்க கால்சட்டைப் பையில் கையை விட்டான். கைக்குட்டைக்குப் பதில் கனமாக ஒன்று கையில் அகப்பட்டது. ஆ! அது. அது… அந்த மணிப்பர்ஸ்தான்.

“நாம யாருக்கு என்ன தீங்கு செய்தோம்?” என்ற கவிதாவின் குரல் அவன் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. சங்கரின் உள்ளத்தை யாரோ கசக்கிப் பிழிவது போல இருந்தது. “பணத்தைப் பறி கொடுத்த அந்த மாது எவ்விதம் தவிப்பாரோ? அவளுடைய சாபம் இப்போது என் மகனின் உயிரைக் குடிக்கப் போகிறதோ? நான் செய்த தவறுக்கு என் ரவி தண்டனையை அனுபவிக்க வேண்டுமா? இல்லை….இல்லை… ஆண்டவா! எனக்கு என் மகன்தான் வேண்டும். இந்தப் பணம் வேண்டாம். என் ரவி எனக்கு வேண்டும் ரவி வேண்டும்.” எனச் சங்கரின் உள்ளம் அந்த ஆண்டவரிடம் மன்னிப்புக்கேட்டுத் தவித்தது.

ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தவனாய்ப் புத்துணர்வுடன் சங்கர் தலையை நிமிர்த்தினான்.. அவன் நிமிர்வதற்கும் மருத்துவர் அறையிலிருந்து வருவதற்கு சரியாக இருந்தது. வந்தவர் “இனிக் கவலைக்கு இடமில்லை. உங்க மகனைக் காப்பாற்றி விட்டோம்.இனிமேலாவது பிள்ளையை ஜாக்கிரதையா பாத்துக் கொள்ளுங்க…..”எனப் புன்னகைத்தபடி கூறினார்.டாக்டருக்கு நன்றி கூறிய அவர்கள் ரவியை பார்க்க அறையினுள் சென்றனர்.குறுகுறு பார்வையுடன் கையை நீட்டி அரவணைக்கும்படி ரவி அவர்களை வரவேற்றது அவர்கள் வயிற்றில் பாலை வார்த்ததுபோல் இருந்தது.

ரவிக்குக் கவிதா முத்தமழை பொழிந்தாள்.சங்கர் அவனை இமைக்காமல் பார்த்தான். “அப்பா… அப்பா…” என்றபடி தன் கையைச் சங்கரிடம் நீட்டினான். கையில் முத்திரை ஒன்றைத் பதித்த அவன் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகியது. என்னங்க அதுதான் நம் மகன் கிடைச்சிட்டானே? இன்னும் ஏன் இந்தக் கண்ணீர்?” என கவிதா சங்கரின் கண்ணீரைத் துடைத்தாள். “நாம யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாதபோது நமக்கு எந்தச்சோதனையும் நேராதுங்க…” எனக்கவிதா மகன் பிழைத்த பூரிப்பில் பேசினாள்.

மகன் ரவியைத் தூக்கியடி கவிதாவைத் தன் பெற்றோருடன் வீட்டிற்குத் தனது வாடகை உந்து வண்டியில் ஏற்றி சென்ற சங்கர் அவர்களை வாசலில் இறக்கினான். “என்னங்க இன்றைக்குச் சவாரி போதும். வீட்டுக்கு வாங்க” என்ற கவிதாவிடம், “இல்லை கவிதா எனக்கொரு முக்கியமான வேலை இருக்குது. முடிச்சிட்டு ஒரு நொடியில் வந்திடுறேன்” எனக் கூறியவன் தன் வண்டியை ஒட்டத் தொடங்கினான். தனக்குச்சொந்தமான ரவி கிடைத்துவிட்ட பூரிப்பில் தனக்குச் சொந்தமில்லாத அந்தப் பர்சை அதன் சொந்தக்காரரிடம் ஒப்படைக்க, காவல்துறையை நோக்கி அவன் வண்டி தங்குதடையின்றிச் சென்றது.

– தேடிய சொர்க்கம், முதற்பதிப்பு: பெப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *