கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 2, 2024
பார்வையிட்டோர்: 1,611 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கீதாவின் வரவிற்காக அந்த ஆபீஸ் கட்டிடத்தின் கீழே நின்று கொண்டிருந்தான் சங்கர், வாகனங்கள் வீட்டிற்கு போகின்றவர்களின் வேகத்தை மிஞ்ச முடியாமலும், சிவப்பு விளக்கு தடைகளாலும் அங்கங்கே ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்தன.

லிப்டிலிருந்து வெளிப்பட்டு வெளியே வந்த கீதா, “சங்கர் என்ன விசேஷம். இந்தப் பக்கம்” என்றவாறு ஆச்சரியப்பட்டாள்.

“வா ஒரு கப் காபி சாப்பிடலாம்” என்றவாறு அவளே அருகிலிருந்த ரெஸ்டாரெண்டிற்குள் நுழைந்ததும், “என்ன சாப்பிடுகிறாய்” என்று கேட்டான் சங்கர்.

அவனை ஆச்சரியமாகப் பார்த்த கீதா “என்ன சங்கர். என்னாச்சு.. ஒரு நாளும் நாம் காபி தவிர எதுவும் சாப்பிட்டதில்லை. புதிதாக கேட்கிறீர்கள் ஏதாவது விசேஷமா” என்றாள்.

“ம்..ம்…. அநேகமாக நம் கடைசி சந்திப்பாக இருக்கலாம் இது. அதனால்தான் கேட்டேன். ஐஸ்கிரீம் சாப்பிடுகிறாயா’ என்று கேட்டான்.

கீதாவின் முகம் சுருங்கிப் போக “ம்…..” என்று தலையாட்டியவள் “சங்கர் நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்” என்றாள்.

“ம்…சங்கீதா நானும்கூட ஒரு முடிவோடுதான் இன்று உன்னைப் பார்க்க வந்தேன”.

“சொல்லுங்களேன்”.

“வருத்தமாக இருந்தாலும் முதலில் ஐஸ்கிரீம் சாப்பிடு”.

இருவரும் மௌனமாக ஐஸ்கிரீம் சாப்பிட்டு முடிந்ததும் “கீதா, நாம் ஒரே ஊரில் இருப்பதால் சந்திக்காமல் இருக்க முடியாது. நாம் நண்பர்களாக பழகுவதைக் கூட என் மனைவியால் சகிக்க முடியவில்லை. அதனால்…” என்று இழுத்தான் சங்கர்.

“ம்…. நீ ஏதோ சொல்ல வந்தாயே” என்று அவளிடம் கேட்டபோது, “எனன அதனால்…” என்று கேட்டாள் கீதா.

“நீ ஏதோ சொல்லப் போகிறேன் என்றாயே. அதை முதலில் சொல்லு”

“சங்கர், இன்றுகூட உங்கள மனைவி போன் பண்ணி மிகவும் அசிங்கமாகத் திட்டினார்கள். அதனால் நான் ஒரு முடிவுசெய்து. டிரான்ஸ்பருக்கு எழுதிக் கொடுத்து விட்டேன். நாம் வேறு வேறு இடங்களில் பிரிந்து இருப்பது தான் நல்லது என்று நினைத்து ஈரோட்டில் என் அக்காவுடன் போய் சேர்ந்து இருக்கலாம் என்று டிரான்ஸ்பருக்கு எழுதிக் கொடுத்துள்ளேன்”.

“கீதா… இதோ பார். நான்கூட என் அண்ணா குடும்பம் ஈரோட்டில் இருப்பதால், இன்றுதான் ஈரோட்டிற்கு டிரான்ஸ்பர் ஏற்பாடு செய்துவிட்டு வந்தேன்” என்றான் சங்கர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *