கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 28, 2024
பார்வையிட்டோர்: 358 
 
 

அந்த மூன் ஹோட்டலில், நிலா விருப்ப விடுமுறையில் சென்றிருந்தது, அதற்கு காரணம் அவள்தான். ரெஸ்டாரண்டில் மொட்டை மாடியில் ரதியா மட்டும் மின் விளக்குகளுக்கு போட்டியாக ஒளிர்ந்துகொன்டிருந்தாள்.யாரையோ எதிர்பார்த்தவளாய், அந்நள்ளிரவில் தன்னந்தனியாய், இருளிடம் வெளிச்சத்தை பாதுகாத்துகொண்டிருந்தாள் பிரகாசமாக.

ஹோட்டல் வாசலில் ஒரே நேரத்தில், ஒரு கார், ஒரு பைக், ஒரு ஆட்டோ வந்து நிற்கிறது. மூவரும் ஒருவரை ஒருவர் தெரியாத புன்னகையை தெளித்துவிட்டு ஹோட்டல் மாடிக்கு வருகின்றனர். காத்திருந்த ரதியா, வரவேற்றாள், “அட பாவிகளே, இதே மாதிரி மூனு பேரும் ஒரே நேரத்தில் என் வாழ்கையில் வந்திருந்தால், எந்த பிரச்சனையும் வந்திருக்காது”என மனதில் நினைத்துகொண்டு அமர்கிறாள், அமர சொல்கிறாள். மூவருக்கும் அதிர்ச்சி. அவள் பிரத்யேகமாக அந்த டெரசை முழுவதுமாய் புக் செய்திருந்தாள்,யாருமில்லை அவர்கள் மட்டும்.அழகான அமைதி. எல்லா எமோசனையும் கட்டுக்குள் வைத்தது அந்த சுற்றுசூழல் அமைப்பு.

நால்வருக்கும் அந்த வட்ட மேசையில் டின்னர் சாப்பிட தயாராக இருந்தது. ரதியா சிறிது நேரம் மௌனம் காத்தாள். அந்த மூவரும் பலவாறு பயணித்துக்கொண்டிருந்தனர் மனதில் தயக்கத்தோடு. அப்போது ரதியா “என் அழைப்பை ஏற்று வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி, ரொம்ப யோசிக்க வேணாம்”, ஒருவர் ஒருவராக அறிமுகம் செய்தாள், “இது சுரேஷ் , என்னோடா வருங்கால கணவர், இது சதிஸ், என் எக்ஸ் லவர், அப்புறம், இது நம்ம சுகன், என் பால்ய சிநேகிதன். இதெல்லாம் என்னோடா பாயின்ட் ஆப்வியுவ். எனக்கு இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம். சோ நான் நிறைய யோசிச்சுதான் இந்த மீட்டிங் அரேஞ்சு பண்ணேன். ஏன் அப்டீன்னா என் லைப்ல 3 முக்கிய நபர்கள் நீங்கள்தான் அதுனாலதான். இதுக்கு மேல உங்களுக்கே எல்லாம் புரியும்னு நெனைக்கிறேன்.

ஆரம்பத்தில் இருந்த அதிர்ச்சியில் இருந்த அவர்கள், சும்மா பேருக்காக பார்த்துகொண்டனர். மீண்டும் ரதியா “தயவு செஞ்சு இன்னைக்காவது முழுசா உண்மையா பேசி புரிஞ்சுக்குவோம் . இதுல நெறைய பேர் வாழ்க்கை அடங்கிருக்கு. நீங்க மூணு பேரும், தனி தனியா நெறைய கேள்வி பட்டுருப்பீங்க இப்போ அதெல்லாம் பேசி clear பண்ணிக்கோங்க”.னு சொல்லிவிட்டு யதார்த்தமாக சாப்பிட தொடங்கினாள்.

கடுப்பான, சுரேஷ் “என்ன தியா இதெல்லாம், இப்ப ரொம்ப தேவையா?”, கேள்வி கேட்க, ரதியா “சாரி சுரேஷ், நீங்கதான் ரொம்பா முக்கியமானவர் இதுக்கப்புறம்…, சோ ப்ளீஸ் பீ குவைட்..”, குறுக்கிட்ட சதீஷ் “ஹே ரதி! உன் பண திமிர இதுல காட்டுறியா? என்ன எதுக்குடி ஆக்சிடென்ட்னு பொய் சொல்லி வர வச்ச?”, ரதி “வெயிட் மிஸ்டர் சதீஷ், நான் ஒன்னும் பொய் சொல்லல, இன்னும் நடக்கல அவ்ளோதான். தென்…. நீ ஏன்டா பேசமா இருக்க சுகன். கம் ஆன், டேக் ஆப்”, சோம்பலாக சுகன் “உனக்கு என்ன வேணும் சொல்லுடி, நீ எப்போவும் போல ஆட்டோ கூப்பிட்டேன்னுதான், நான் வந்தேன். நீ ஏதேதோ பேசிட்டு இருக்க” என்றான் சலிப்பாக.

ரதி “ஓகே.., ஓகே.., உங்க வாய்தான் பேசிருக்கு, மனசு பல குழப்பதோடு மௌனமா இருக்கு. சரி நானே ஆரம்பிக்கிறேன், நம்மை அறியாமல் நாமலே நமக்குள்ள நெறய பாதிப்ப ஏற்படுத்தி இருக்கோம். அதனால்தான் பிளீஸ் பீ ஓபன் எபோட்மீ” என்று தூண்டிவிடுகிறாள்.

டென்சனாகி சுகன் “நீயே என்ன பிரன்டுதான் சொன்னே, இதுல எங்கள ஓபனா பேச சொல்ற? சுரேசும் , சதிசும் திடுக்கிட்டு “அப்ப நீ பிரண்டு இல்லையா?” என கோரசாக கேக்க,. தண்ணி குடித்துகொண்டிருந்த ரதியா குபீர்னு சிரித்துவிட்டு, “சாரி.. சாரி கேரி ஆன்”. என்றாள். மூவருக்கும் இன்சுல்ட் ஆனது. இருந்தும் கடுப்பாகி, சுகன் தொடர்ந்தான்“எனக்கு விவரம் தெரிஞ்ச நாளிலிருந்து, நான் இவள லவ் பண்றேன் சார், ஆனா இவ என்ன நண்பன் நன்பனு சொல்லிட்டு இவன லவ் பண்ணா..

அடுத்து, சதீஷ் “ நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ணது உண்மைதான், ஆனா இவ எனக்கு செட் ஆக மாட்டானுதான், நான் இவள அவாய்டு பண்ணேன் இப்போ தீடிர்ன்னு, இதெல்லாம் ஏன் பண்றான்னு தெரியல” னு சுரேஷை பார்க்கிறான்

சுரேஷ் “நான் உன் பாஸ்ட் லைப் பத்தி பேசுனது உண்மைதான் தியா, ஆனா அதுக்காக நீ இவ்ளோ கேவலமா இருப்பேன்னு நினைக்கல, ச்சே எல்லாம் போச்சு”..

இப்ப ரதியா ஆழ்ந்து யோசித்துவிட்டு “ஓகே ஆண்களே, எல்லாரும் கிட்டத்தட்ட முக்கியமான உண்மையை பேசிடீங்க. ரொம்ப சந்தோசம். பட் நான் இன்னும் சுகனை நண்பனாத்தான் பாக்குறேன், அதேபோல சதிசையும் காதலிக்கிறேன். ஆனா வேறு வழியில்லாமல் சுரேசையும் குடும்பத்திற்காக திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறேன். இதுக்கு

அப்புறம் நீங்களே முடிவு பண்ணிக்கோங்க என்ன பத்தி. இவளோதான் இந்த ர..தி..யா”.

தாடியை தடவியவாறு சுகன், “நீ என்ன ஏமாத்துனே, சதிசை கை காட்டி இவன் உன்னய ஏமாத்துனான். இப்போ யார் யார எமாத்த போரான்னு தெரியலயே” னு தலையில் அடித்து கொண்டான்.

சதீஷ் “டேய் ஆட்டோகாரா , நானா அவள ஏமாத்தினேன்?, உன்னாலத்தான்டா நான் அவல ப்ரேக்அப்பே பண்ணேன். எப்ப பாத்தாலும் கூடவே சுத்திகிட்டு, சீ என்ன மனுசன்டா நீயெல்லாம், வேற வேலையே இல்லையா உனக்கு?சுரேஷ் , “ஹே.. ஹே.. இருங்கடா, நீங்க ரெண்டு பேரும் போட்டி போட்டு கடைசியா ஏமாந்தது நாந்தண்டா”.இவ்வாறு பேசி மூவருக்கும் வாக்குவாதம் முற்றி எல்லாரும் ரதியாவாய் தவறாய் பேசி, கண்டபடி திட்டி தீர்த்தே விட்டனர்.

மிக நேர்மையாய் நடந்து, தன் வாழ்வியலை புரிய வைக்க முயற்சி செய்து அவமானப்பட்டு மனதுக்குள் கண்ணீரில் குளித்தவளாய், ரதியா “ ஓகே… நன்றி எதிர் பாலினமே, மீட்டிங் முடிந்தது நீங்க போகலாம்”.

“நீ வான்னா வர்ரதுக்கும் போன்னா போரத்துக்கும் நாங்க என்ன இதுவா அதுவா, ஆல, தோல, அப்டி, இப்பிடி” பேசி தீர்த்துவிட்டு முதலில் சுரேஷ் சென்று விட்டான். பின் நீண்ட மௌனதிற்கு பின் சதீஷ் “தேவைஇல்லாம லைப்ப காம்பிளிகேட் பண்ணிகாதே, ஒலுங்க சுரேச சமாதனபடுத்தி கட்டிக்க.., முதல்ல இவன் கூட சேர்ரத விடு, எல்லாம் நல்ல படிய நடக்கும்” னு அவனும் கிளம்பி விட்டான்.

பிறகென்ன, சிறிது நேரத்திற்கு பிறகு சுகன் “சரி வா போகலாம்” என கூப்பிட்டான் ரதியை. அவள் “வந்த எனக்கு போக தெரியும் நீ போ” என்றாள். சுகன், “நீ எப்டி போக பிளான் பண்றேன்னு தெரியும், எனக்கு கூட அப்டித்தான் போகணும்னு தோணுது,ஆனா என்ன பண்றது..’”என்றான். ரதியா “எப்டி கண்டுபுடிச்ச?” சுகன், “நீ மொட்டை மாடில மீட்டிங்னுபோதே, நான் மட்டுமில்ல எல்லாருமே அதேதான் நினைப்பாங்க, அதனால் அந்த சீன் இப்போ இல்ல வா படிபடியா போகலாம்” னு சைகையில் சொன்னான் அவளும் அரை மனதாய் விரக்தியோடு கிளம்பினாள்.

இருவரும் கீழே வந்துபார்த்தால், சுரேசும் சதிசும் நக்கல்தொனியில்புன்னகைத்த வண்ணம் இருந்தனர். என்ன என்பதுபோல் வியப்பாக ரதி பார்க்க, “இல்ல.., அவனும் உன்னை விட்டுட்டு வந்திருந்தா நீ மேலேந்து குதிப்பேண்ணு நெனச்சேன், அதான் வெயிட் பண்ணேன்”

என்றான் சுரேஷ்.” சதீஷ்,சுரேஷ்,சுகன் மூவரும் சுற்றி நின்று சிரித்தனர். ரதி ஒரு மாதிரி திகைத்தாள் நடப்பதறியாமல்.

“ஹே லூசு போயும்,போயும், பர்த்டே அன்னைக்கா, சூசெய்டு ட்ரை பண்ணுவ”– சதிஸ். “உன் லைப்ல மட்டும்தான் பாஸ்ட் இருக்குமா” – சுரேஷ். “அவனவன் என்னன்ன பிரச்னையில் ஓடிட்டு இருக்கான், இவ காமெடி பண்ணிட்டுருக்கா”– சுகன். அச்சூழலை மூவரும் மிக யதார்த்தமாக கடந்தனர். சுற்றி நின்று கோரசாக “இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்” னு பாடினர். ரதியா ஆனந்த கண்ணீரில் புன்னகைத்தாள்.

“புதுமை பெண்களை இனங்கண்டதே பழைய ஆண்கள்தான்”- .

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *