மௌலானா ஆஸாத்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: June 9, 2024
பார்வையிட்டோர்: 352 
 
 

(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மகாத்மா காந்தி எல்லா உயிர்களிடத்திலும் அன்பாக இருந்தார். எல்லா ஜனங்களிடத்திலும் அன்பாக இருந்தார். ஆனாலும் அவருக்குச் சில பேரிடத்தில் அதிக அன்பும் மதிப்பும் உண் டாயின. அவர்களோடு அதிகமாகப் பழகினார். அப்படிப்பட்டவர் கள் சில பேராவது உங்களுக்குத் தெரியும். உங்களைக் கேட்டால் உடனே ஜவாஹர்லால் நேரு , ராஜாஜி என்று வரிசையாகச் சொல்ல ஆரம்பித்து விடுவீர்கள். அந்த வரிசையில் நிச்சயமாக மௌலானா அபுல் கலாம் ஆஸாத்தும் ஒருவராக இருப்பார். இப்போது அவர் பாரத நாட்டின் கல்வி மந்திரியாக இருப்பது உங்களுக்குத் தெரியுமே ! கல்வி கற்கும் இளம் பருவத்தில் உள்ள நீங்கள் கல்வி மந்திரியைக் குறித்து அதிகமாகத் தெரிந்துகொள்வது நல்லது தானே?

இப்போது மௌலானா ஆஸாதைப் பார்த்தால் மிகவும் சாது வாகத் தோன்றுகிறார். இவர் பெரிய புரட்சிக்காரர். பயங்கரமான புரட்சிக்காரர் அல்ல. இளமையிலேயே அதாவது மகாத்மா காந்தி சுதந்தரப் போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே இவருக்கும் விட்டிஷ் அரசாங்கத்துக்கும் ஆகாது. பிரிட்டிஷ்காரர்கள் இவரை ஆபத்தான மனிதர் என்று நினைத்துக்கொண் டிருந்தார்கள் .

அபுல்கலாம் என்பது இவருடைய பெயர். மௌலானா என்றால் தலைவர் என்று அர்த்தம். பொதுஜனங்களுக்கு இவரிடம் மிகவும் அன்பு ஏற்பட்டது. இவரைத் தம்முடைய தலைவர் என்று மதிப்பு வைத்துப் பாராட்டினார்கள். அவர்கள் அளித்த பட்டம் அது. ஆஸாத் என்றால் சுதந்தரம் என்று அர்த்தம். இவர் சின்ன வயசி லேயே கவிதையும் கட்டுரையும் எழுதி வந்தார். அப்போது தம் முடைய பெயரைப் போடாமல் ஆஸாத்’ என்ற புனைபெயரோடு எழுதி வந்தார். அது பிறகு இவருடைய சொந்தப் பெயரோடு ஒட்டிக்கொண்டது. – மௌலானா அபுல் கலாம் ஆஸாத்தின் தகப்பனார் முகம்மத் கைருதீன் என்பவர். அவர் ஒரு பெரிய படிப்பாளி. இஸ்லாம் மதுசம்பந்தமாகப் மதகுருவாக இருந்தார். அவருக்கு ஆயிரக்கணக்கான சிஷ்யர்கள் உண்டு. அவருடைய முன்னோர்கள் கூடப் பெரிய கல்விமான்களாக இருந்தார்கள்.

முகம்மத் கைருதீன் டில்லியில் வாழ்ந்து வந்தார். 1857- ஆம் வருஷம் இந்தியாவில் ஒரு சுதந்தரப் போர் நடந்தது. பிரிட்டிஷா ருடைய படையில் இருந்த இந்தியப் படைவீரர்கள் அந்தப் போரை நடத்தினர். அதை வெள்ளைக்காரர்கள், “சிப்பாய்க் கலகம்” என்று சொல்வார்கள். புரட்சிக்காரர்களை யெல்லாம் அப்போது பிரிட்டி ஷார் சிறிதும் இரக்கம் இல்லாமல் கொன்றனர். அவர்கள் வீடுகளைக் கொளுத்தினர். டில்லியிலும் இத்தகைய அக்கிரமங்கள் நடந்தன. அக்காலத்தில் ஆஸாத்தின் தந்தையார் அங்கே இருக்க மனம் இன்றி அரேபியாவுக்குச் சென்றார். முகம்மதியர்களின் புனித ஸ்தலமாகிய மெக்காவில் தங்கி வாழ்ந்து வந்தார்.

மதநூல்களில் நிபுணராகிய அவருக்கு மெக்காவில் பல மாணாக்கர்கள் சேர்ந்தனர். ஒரு பெரிய படிப்பாளியின் பெண்ணை – அங்கேயே கல்யாணம் செய்து கொண்டார். அடிக்கடி இந்தியாவிலிருந்து முஸ்லிம்கள் மெக்காவுக்கு யாத்திரையாகப் போவதுண்டு. அப்படிப் போனவர்களில் கைருதீனுடைய சிஷ்யர்கள் பலர். அவர் கள் தம்முடைய ஆசிரியரை அணுகி, ‘நீங்கள் மறுபடியும் இந்தியாவுக்கே வந்துவிட வேண்டும்” என்று வேண்டிக்கொண்டார்கள்.

1888- ஆம் வருஷம் அபுல்கலாம் ஆஸாத் மெக்காவில் பிறந்தால் 1898-ஆம் வருஷம் இவர் தகப்பனார், தம் மாணாக்கர்கள் விருப்பத்தை நிறைவேற்றினார்; அதாவது தம் குடும்பத்துடன் இந்தியாவுக்கே வந்துவிட்டார். கல்கத்தாவில் வசிக்கலானார்.

அபுல் கலாம் ஆஸாத்தின் தந்தையாருக்கு வெள்ளைக்காரர் நாகரிகத்தைக் கண்டால் அருவருப்பு ஏற்பட்டது. இங்கிலீஷ் பாஷையில் கூட அவருக்கு வெறுப்புத்தான். அவர் வீட்டில் எல்லாம் பழைய பாணியில் தான் இருக்கும். கீழே பாயை விரித்துத்தான் உட்காருவார். மேஜை நாற்காலி இல்லை. ராஜா வந்தாலும் சரி, மந்திரி வந்தாலும் சரி; அந்தப் பாயில் தான் உட்கார வேண்டும். தம் பிள்ளையை அவர் இங்கிலீஷ் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பவில்லை. தாமே அரபு பாஷையையும் பர்ஸிய மொழியையும் சொல்லிக் கொடுத்தார். வேறு வாத்தியார்களையும் கொண்டு கற்பிக்கச் செய்தார்.

ஆஸாத்தின் தாயார் அரேபியாவில் பிறந்தவர். அவர் தாய் மொழி அரபு பாஷை . தகப்பனாரோ இந்தியர். அவர் தாய்மொழி உருது. ஆகவே இரண்டு பாஷைகளிலும் ஆஸாத்துக்கு அறிவு இயற்கையாகவே அதிகமாக இருந்தது. அதோடு அவரு டைய கூர்மையான அறிவு எத்தகைய படிப்பானாலும் வெகு சீக்கி ரத்தில் பற்றிக் கொண்டது. அரபு பாஷையி லேயே கணிதம், தர்க்கம், பூகோ ளம், சரித்திரம் முதலிய எல்லாப் பாடங்களையும் இவர் கற்றார். இவர் கற்ற கல் வித்திட்டம் பழ மையானது. சாமானிய மாணாக்கனாக இருந்தால், அந் தத் திட்டத்தின் படி கற்றுத் தேர்ச்சி பெற 14 வருஷங்கள் ஆகும். கெட்டிக் காரப் பையனாக இருந்தால் 10 வருஷங்களில் படிக்கலாம். ஆனால் ஆஸாத் படித்த வேகம் இந்தக் கணக்கில் அடங்கவே இல்லை. அதைச் சொன்னால் நீங்கள் நம்பக்கூட மாட்டீர்கள். நாலே வருஷத்தில் அந்தப் படிப்பை இவர் படித்துவிட்டார். அது எப்படி என்று நீங்கள் பிரமிக்கலாம். சின்ன வயசில் மெக்காவில் இருந்தபோதே இவர் அரபு பாஷையைப் படித்தார். பல விஷயங்களைத் தெரிந்து கொண்டார். இங்கே வந்தவுடன் எல்லாம் சுலபமாக இருந்தன. அதோடு இவருடைய அறிவும் கூர்மையாக இருந்தது. அதுதான் காரணம்.

இது மட்டும் அல்ல. நன்றாகப் படிக்கிறவராக இருந்தால், மற்றவருக்குப் பாடமும் சொல்வார்கள். தாம் பாடம் கேட்ப தோடு கூடச் சிலருக்கு ஆஸாத் அந்தச் சிறு வயசிலேயே ஆசிரிய ராகவும் இருந்தார். இவருக்கு அப்போது வயசு பதினாலு . அவரி டம் பாடம் கேட்டவர்களில் தாடிக்காரப் பட்டாணியர் ஒருவர். அவருக்கு ஆஸாத்தின் அப்பா வயசு இருக்கும். அவர் ஆஸாதுக்கு மாணாக்கர் ! வயசான பிறகு மூளையில் விஷயம் சுலபத்தில் ஏறுமா? அந்த மாணாக்கர் கொஞ்சம் நிதானமான பேர்வழி. தர்க்கத்தில் ஒரு பகுதியை ஆஸாத் அந்தப் பட்டாணியருக்குச் சொல்லித் தந்துகொண் டிருந்தார். ஒரு விஷயத்தை விளக்கினார். அவருக்கு அது விளங்கவில்லை. பல உதாரணங்களைச் சொல்லித் தொண் டைத் தண்ணீர் போக விரிவாகச் சொன்னார். அப்போதும் அது அந்தத் தாடிக்கார மாணாக்கர் மூளையில் ஏறவே இல்லை. ஆஸா துக்குக் கோபம் வந்துவிட்டது. எவ்வளவு தடவைதான் சொல், லிக் கொடுப்பார் ! புத்தகத்தை அவர் மூஞ்சியில் எறிந்தார். “ஓய்! உமக்கு மூளை களிமண்ணால் செய்திருக்கிறது. அதில் இந்தப் படிப் பெல்லாம் ஏறாது. பேசாமல் வீட்டுக்குப் போய் மாட்டோடு மாடாக இருந்து புல்லைத் தின்னும். அதற்குத்தான் லாயக்கு” என்று சொல்லி அனுப்பிவிட்டார். பாவம் அந்த மனிதர் வாயையே திறக்கவில்லை. பதில் பேசமாத்திரம் அல்ல; சாப்பிட வாயைத் திறக்க வேண்டுமோ அதைக் கூட அவர் செய்யவில்லை. நாம் இப்படி இருக்கிறோமே!’ என்று வருந்தி அன்று சாப்பிடா மல் பட்டினியாகவே இருந்தார்.

இந்தச் சமாசாரம் ஆஸாதின் அப்பாவுக்குத் தெரிந்தது. தம் பிள்ளையின் மேல் அவருக்குக் கட்டுக்கு அடங்காத கோபம் வந்து விட்டது. “உனக்குக் கொஞ்சங்கூடப் புத்தி இல்லை. உன் வய சென்ன? அவர் வயசென்ன? அந்த மனிதர் மனசைப் புண்படுத்தி விட்டாயே! என் வயசான அவரிடம் மரியாதை இல்லாமல் நடக் கலாமா? அவர் பட்டினி கிடக்கிறாரே! போய் முதலில் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, அவரைச் சாப்பிடும்படி செய்து வீட்டு வா” என்று கடிந்து கொண்டார்.

ஆஸாத் பட்டாணியர் வீட்டுக்குப் போய்த் தம் வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டார். அவரோ, ”நீங்கள் எனக்கு வாத்தியார். என்னைக் கண்டிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு. நீங்கள் என்னிடம் மன்னிப்பைக் கேட்க நியாயமே இல்லை, என் முட்டாள் தனத்தை நீங்கள் எடுத்துக் காட்டுவது எனக்குத்தானே நல்லது?” என்று சொன்னார். கடைசியில் ஆஸாத் அவரைக் கெஞ்சிச் சாப்பிடச் செய்துவிட்டுத்தான் வீடு திரும்பினார்.

மௌலானா ஆஸாத் 1905-ஆம் வருஷம் முதல் 1907-ஆம் வருஷம் வரையில் எகிப்தில் உள்ள கெயிரோ சர்வகலாசாலையில் படித்துப் பட்டம் பெற்றார். இளமையிலே இங்கிலீஷ் படியாமற் போனாலும் பிற்காலத்தில் தாமாகவே படித்துக் கொண்டார். மிகவும் சிறந்த ஆங்கில இலக்கியங்களைப் படித்து உணர்ந்தார். இவரிடம் இப்போது இருக்கும் ஆங்கில நூல்கள், இந்தியாவில் வெகு சிலரிடமே இருக்கக் கூடும்.

ஆஸாத் மிகவும் சிறிய வயசிலேயே கவிதை எழுதத் தெரிந்து கொண்டார். எவ்வளவு கடினமான விஷயத்தைக் கொடுத்தாலும் அதைப் பாட்டாகப் பாடிவிடுவார். 14 வயசு நடந்துகொண் டிருந்தபோதே இவர் கவிதைக்காகவே ‘நெரேஞ் ஆலம்’ என்ற உருதுப் பத்திரிகையை நடத்தி வந்தார். இளங் கவிஞர்களெல்லாம் அதில் கவிதைகளை எழுதினர்.

அவ்வப்போது கவி சம்மேளனம் நடைபெறும். அப்போது பல கவிஞர்கள் கூடுவார்கள். கரடுமுரடான எதுகைகளை வைத் துப் பாடும்படி அவர்களுக்குச் சொல்வார்கள். இன்ன இன்ன வார்த்தைகளை இப்படி இப்படி வைத்துப் பாடவேண்டும் என் பார்கள். அப்படிப் பாடியவர்களுக்குள் கெட்டிக்காரருக்குப் பரிசு வழங்குவார்கள்.

இந்தச் சம்மேளனங்களுக்கு ஆஸாத் போவார். அவர்கள் போடும் நிபந்தனைகளின் படி பாட்டுப் பாடிக் காட்டுவார், பரிசைத் தட்டிக்கொண்டு போவார். சபையில் உள்ளவர்கள், ”இந்தச் சிறு பையன் இவ்வளவு கடினமான பாடல்களைப் பாடுகிறானே ; இவனால் முடியுமா?” என்று சந்தேகித்தார்கள். நாதிர்கான் என்ற பெரிய கவி ஒருவர் ஆஸாத் சொந்தமாகப் பாடுவார் என்று நம்பவே இல்லை. யாரோ, மறைவாக இருந்து சொல்லிக் கொடுக்கிறார்கள். இந்தப் பிள்ளையாண்டானுக்குப் பெருமை உண்டாக வேண்டும் என்று செய்கிற வேலை இது. இல்லாவிட்டால், இந்தப் பையனாவது இந்தப் பாட்டைப் பாடவாவது எவ்வளவு நாளைக்கு இந்தத் திருட்டு நடை பெறும்? நான் ஒரு நாள் கண்டு பிடித்துவிடுவேன்’ என்று மனசுக் குள் எண்ணியிருந்தார். ஆம்; அவர் கண்டு பிடித்துவிட்டார். எப்ப டித் தெரியுமா? அந்த வேடிக்கையைக் கேளுங்கள்:

ஒரு நாள் ஆஸாத் ஒரு புத்தகக் கடையில் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்துக்கொண் டிருந்தார். புத்தகப் பைத்தியம் அல்லவா? அப்போது அந்த வழியாக நாதிர்கான் என்ற கவிஞர் போனார். அவர் ஆஸாத்தைப் பார்த்தார். இந்தப் பையன் வண்ட வாளத்தை இப்போது தெரிந்து கொள்ளலாம். சரியானபடி சிக்கவைத்து இவனுடைய திருட்டுத்தனத்தை வெளிப்படுத்த லாம் என்று எண்ணி அந்தக் கடைக்குள் போனார். “ஏ பையா கவி சம்மேளனத்தில் நீ பல கவிகளைச் சொல்வதைக் கேட்டிருக் கிறேன். அவைகளெல்லாம் நீயே இயற்றியவை என்று எப்படிச் சொல்வது? நீ உண்மையிலேயே கவி இயற்றும் சாமர்த்தியம் உடையவனாக இருந்தால், இப்போது அதைக் காட்டு பார்க்கலாம்! “யாத்நஹோ, ஷாத்தஹோ, அபாத்தஹோ’ – இவைகளை வைத்துப் பாடு பார்க்கலாம்” என்றார். பையன் பல்லைக் காட்டிப் பரக்க விழிப்பான் என்று அவர் எதிர்பார்த்தார்.

ஆஸாத் அதைக் கேட்டார். அவருக்குச் சிறிது கோபம் வந்தது. கடை வீதியில் நாலு பேருக்கு முன்னிலையில் இப்படிக் கேட்கிறாரே என்று ரோசமாக இருந்தது. அந்த ரோசம் அவரு டைய சக்தியைத் தூண்டிவிட்டது. சடசடவென்று கவிதையைச் சொல்ல ஆரம்பித்தார். நாதிர்கான் காதில் அவை விழுந்தன. அவருக்கு ஒன்றுமே தோன்றவில்லை. பிரமித்துப் போனார். “ஹா ஹா ஹா” என்று கூத்தாடினார். அவ்வளவு பேருக்கு நடுவில் தம்முடைய அறியாமையை ஒப்புக்கொண்டார். “உண்மையில் நீ சிறந்த கவி அப்பா ! நான் இதுவரையில் நம்பவில்லை. எல்லாம் ஏமாற்றமென்று நினைத்தேன். நீ மகா கெட்டிக்காரன். எத்த னையோ பேர் கவி பாடுகிறார்கள். ஆனாலும் உனக்குச் சமான மாகச் சிலரே இருக்கக்கூடும். நீ தீர்க்காயுளாக வாழ வேண்டும்” என்று ஆசீர்வாதம் செய்தார்.

பதினாலு பதினைந்து வயசிலே ‘லிஸானஸ் ஸிதிக்’ என்ற பத்திரிகை ஒன்றை இவர் நடத்திவந்தார். உண்மை வாக்கு தப்பது அதன் பொருள். அதில் எல்லாவிதமான விஷயங்களையும் அலசிவந்தார். அதன் ஆசிரியர் யாரோ நிரம்பப் படித்த தெரியவர் என்று பலர் எண்ணிக்கொண் டிருந்தார்கள். க்வாஜா

ல்டாப் ஹுஸேன் ஹாலி என்ற பெரிய உருதுப் புலவர் ஒருவர் இருந்தார். அவர் ஸர் லையத் அகமத்கான் என்பவருடைய சரித் திரத்தைப் புத்தக உருவி எழுதினார். அதைப்பற்றி ஒரு விரிவான மதிப்புரையை ஆஸாத்த பத்திரிகையில் வெளியிட்டார். சிறிதும் ஒளிவு மறைவில்லாமல் நூலிலுள்ள குற்றங்களையும் எடுத்துக் காட்டி அந்த மதிப்புரையை எழுதியிருந்தார். அதைப் பலர் படித்துப் பார்த்தார்கள். பலர் பாராட்டினார்கள்; பலர் குறை கூறினார்கள். பலமுடைய கவனத்தை அது கவர்ந்ததானாலும் அவர்களுக்கு ஆஸாத் இன்னாரென்றே தெரியாது; இவர் பதினாறு வயசுப் பையன் என்ப சிறிதும் தெரியாது.

லாகூரில் ஒரு பொ சங்கம் இருந்தது. அதன் ஆண்டு விழா வில் பேசுவதற்கு ஆவாதை அழைத்தார்கள். இவரை நேரில் அறியாவிட்டாலும் ஸானஸ் ஸிதிக்’ என்ற பத்திரிகையின் ஆசிரியர் கற புகழ் ஏற்பட்டிருந்தது. ஆஸாதுக்குச் சிறிய கூட்டகளில் பேசும் பழக்கம் இருந்தது. ஆனாலும் லாகூரில் இருந்த சபையைப் போன்ற சபையில் பேசியதில்லை.

சபையின் ஆண்டு விழாவுக்கு ஆஸாத் சென்றார். 1904-ஆம் வருஷம். இவர் பேசவேண்டிய விஷயமோ வயசில் முதிர்ந்த பெரியவர்கள் பேசுவதற்குரியது. “சமயத்துக்குப் பகுத்தறிவு ஆதாரம் என்பதுதான். அந்த விஷயம். பெரிய சபை. கவிஞர் களும் பேரறிஞர்களும் எழுத்தாளர்களும் கூடியிருந்தனர். பெரிய கவிஞராகிய இக்பால் கூட்டத்துக்கு வந்திருந்தார். எந்தப் புத்த கத்துக்குத் தயை தாட்சிண்யமின்றி ஆஸாத் மதிப்புரை எழுதி யிருந்தாரோ அந்தப் புத்தகத்தின் ஆசிரியராகிய ஹுஸேன் ஹாலியும் வந்திருந்தார். அவர் பெரிய கவிஞர் .

பிரசங்கம் செய்வதற்குமுன் சங்கத்தினர் அவரைக் கூட்டத் துக்கு அறிமுகம் செய்து வைத்தனர். ‘இந்தப் பிள்ளையாண்டானா பேசப்போகிறான்? அதுவும் இந்த நுணுக்கமான விஷயத்தைப் பற்றியா!’ என்று ஆச்சரியப்பட்டார்கள். ஹுஸேன் ஹாலி, பத்திரிகாசிரியராகிய மௌலானா அபுல் கலாம் ஆஸாத் வர பில்லை போல் இருக்கிறது. இவர் அவருடைய பிள்ளை போலும்!’ டான ஆச்சரியத்துக்கு எல்லை இல்லை. இந்தச் சிறுவடை புத்தகத்துக்கு அவ்வளவு விரிவான மதிப்புரை எழுதினான். என்று இவரைப் பார்த்துப் பார்த்து வியந்தார். ஆஸாத் I

ஆரம்பித்தார். அந்த நுணுக்கமான விஷயத்தைப் பேச இல எவ்வகையிலும் தகுதியுள்ளவர் என்பதைக் காட்டினார். கொக னிலும் மற்ற மத நூல்களிலும் இவருக்கு எவ்வளவு அமமா அறிவு இருக்கிறதென்பதைக் கூட்டத்தினர் அறிந்து ஆச்சரியப் பட்டனர். ஹுஸேன் ஹாலி அந்தப் பிரசங்கத்தைக் கேட்டு அய் படியே சொக்கிப் போய்விட்டார். ”சின்ன உடம்பில் வா மூளை” என்று பாராட்டினார்.

வரவர ஆஸாத்தின் அறிவு வளர்ந்து வரிவடைந்தது. நம் நாடு அடிமைப்பட்டுக் கிடப்பதை உணரலானா பிரிட்டிஷ் அரசாங் கத்தின் அக்கிரமங்களைக் கண்டு இவருக்கு கோபம் கோபமாக வந்தது. 1912-ஆம் வருஷம் ‘ஆல் ஹிலால்’ மனறத்திரிகையைத் தொடங்கினார். மிகவும் காரசாரமாக எழுதிவந்தார். அந்த வாரம் பத்திரிகைக்கு வரவர ஆதரவு அதிகமாயிற்று. முதலாவது டம் யுத்தம் ஆரம்பித்த காலத்தில் இவரைப் பாதுகாப்பில் வைத்தார் கள். 1920-ஆம் வருஷம் வரையில் இவர் சிறையில் இருந்தார். பிறகு விடுதலை பெற்றார்.

பிறகு மகாத்மா காந்தியுடன் சேர்ந்து இந்தியாவின் சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபட்டார். காங்கிரஸ் மகாசபையின் தலைவராக இரண்டு தடவை இருந்திருக்கிறார். இரண்டாவது உலகப்போர் நடந்து போது இவர் சிறைப்பட்டார். மகாத்மா காந்திக்கு இவரிடத்தில் தனி மதிப்பு இருந்தது.

இன்று ஆஸாத் இந்தியாவை அரசாட்சி செய்யும் தலைவர்களில் ஒருவர். மகா மேதாவி ; பல நூல்களுக்கு ஆசிரியர், இஸ்லாம் மத சம்பந்தமான விஷயங்களில் இவர் பெரிய நிபுணர். சின்ன வயசிலேயே அறிவிலும் தேச பக்தியிலும் பழுத்திருந்த இவர் இன்று சுதந்தர பாரதத்தின் கல்வி மந்திரியாக இருப்பது பொருத்தமானது.

– விளையும் பயிர், முதற் பதிப்பு: 1956, கண்ணன் வெளியீடு, கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *